இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையின் உள்ளடக்கங்களில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஆணையை மீறும் செயல். மனித உரிமை தொடர்பான விசார ணைகள் தேசிய ரீதியிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தது. சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியா, இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயற்படவிருப்பதாக சி. என். என்., ஐ. பி. என் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் சுஜாதா சிங் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் இந்தியா அக்கறை காட்டுகிறது என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். எனினும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தே நாம் எதையும் செய்வோம் பரஸ்பர விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் நெருக்கமாக இணைந்தே இந்தியா செயற்பட்டு வருகிறது என்றும் சுஜாதா சிங் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்தவருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் நாம் இணங்கிக்கொள்ளாத விடயங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச விசாரணையென்ற விடயம் இப்பிரேரணையின் 10வது பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க இந்தியா தீர்மானித்துள்ளது என்பதை எமது பிரதிநிதி தெளிவாகக் கூறியிருந்தமையையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply