பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் வன்முறை: 13 பேர் சாவு
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது: கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜெüஹார் பகுதியில் தனியார் பாடசாலையில் 3 மாணவர்களையும், அதே பகுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு ஓர் மாணவர் உள்பட 7 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் தேநீர் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
“இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து தனியார் பாடசாலையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் தாக்கினர்.
மேலும், சாலைகளில் டயர்களை கொளுத்திய அவர்கள், அங்குள்ள கடைகளையும் மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்த போலீஸார் மக்கள் அனைவரையும் கலைந்து செல்லக்கோரி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்’ என்று அந்தப் பகுதியிலிருந்த ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply