எதிர்பார்ப்புகளை உதயமாகும் புத்தாண்டு நிறைவேற்றும்

சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினைக் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேச ராசியினை வந்தடைவது ஒரு புதிய வருடத்தின் உதயம் மட்டுமன்றி அது சிங்களவர், தமிழர் உட்பட அனைத்து மக்களிடையேயும் ஒத்துழைப்பினை ஏற்படுத்தும் பலம்மிக்க பிணைப்பு எனக் கூற முடியும். புதிய அறுவடையின் பின்னர், இந்நாட்டு மக்கள் தேசிய கலாசாரம் மற்றும் தமது அடையாளத்தினை சிறப்பான வகையில் எடுத்தியம்பி ஒற்றுமையாக, ஒரே நேரத்தில் சகல பழக்க, வழக்கங்களையும் நிறைவேற்றி சிங்கள – தமிழ் புத்தாண்டின் உதயத்தினை கொண்டாடுவதானது, முழு உலகிற்கும் எடுத்துக்காட்டான முன்மாதிரி.

30 வருட காலமாக இந்த நாட்டை ஆட்கொண்டிருந்த, ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாதென நினைத்திருந்த கொடிய பயங்கரவாதம், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தைரியமிக்க தலைமைத்துவத்தின் கீழ் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், சர்வதேச ரீதியாக இந்நாட்டினை அபிவிருத்தி செய்யும் பாரிய நடவடிக்கையில் இப்போது நாம் காலடி வைத்துள்ளோம்.

எமது அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான அபிவிருத்தியை நோக்காகக்கொண்ட பல செயற்திட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்துவதன் நோக்கம், எமது நாட்டை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைப்பதற்காகவேயாகும்.

அத்துடன் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி ஆன்மீக ரீதியாகவும் முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினை இந்நாட்டில் தோற்றுவிப்பதற்கும் அவை உறுதுணையாக இருக்கின்றன. எமது பண்டைய அரசர்கள் பல வருடங்களாக மேற்கொண்ட பாரிய கருத்திட்டங்களுக்குச் சமனான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கடந்த சில வருடங்களுக்குள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

நன்மை பயக்கக்கூடிய பிரார்த்தனைகள், சிறந்த பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரத்தினைப் பாதுகாத்த வண்ணம் உதயமான புத்தாண்டில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம் இலங்கையர்களான உங்களுக்குக் கிடைத்துள்ளது.

புன்னகை பூத்த முகத்துடன் அந்த பாக்கியமிக்க எதிர்காலத்தினை அடைந்துகொள்வதற்கான முதல் தினம் இன்றாகும். உதயமாகிய சிங்கள. தமிழ் புத்தாண்டு சமாதானம், செளபாக்கியம், மகிழ்ச்சி மிக்க புத்தாண்டாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply