யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளநல ஆலோசனை விஸ்தரிப்பு அவசியம்
வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்படும் ஆலோசனை தெரிவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பரந்த அணுகுமுறைக்கு ஏற்புடைய வகையில் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளரும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை கண்காணிப்புக் குழுவின் தலைவருமான லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்ற, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் அமைச்சர்களின் கூட்டத்தில் இதுதொடர் பாக ஆராயப்பட்டது. தற்போது யுத்தத்தின் எதிரொலியாக மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சமூக உளநல ஆலோசனைகளை மேலும் சிறப்பான முறையில் நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி கண்காணிக்கும் தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகப் பொருளாதார மற்றும் மனநிலை வைத்தியம் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல முறையில் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய சமூக, மனநல ஆலோசனைகள் கணவன்மார் அற்ற குடும்பத் தலைவிகள், பிள்ளைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வயது வந்தவர்கள், வலது குறைந்தவர்கள் ஆகியோருக்கும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தற்போது இத்தகைய சமூக உளநல ஆலோசனை சேவையை பல்வேறு அமைச்சுக்கள் மேற்கொண்டு வருகின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply