ஜெர்மன் சுற்றுலாப் பயணி கருகி பலி
ஒடிஸாவில் தனியார் விருந்தினர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளிக்கிழமை உடல் கருகி இறந்தார். இதுகுறித்து, புரி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரபாஸ் குமார் சாஹு சனிக்கிழமை கூறுகையில், புரியில் உள்ள சக்கரதீர்த்தா சாலையில் உள்ள ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜூலியன் என்ற சுற்றுலாப் பயணி ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது அறையில் இருந்து புகை வருவதை விடுதியின் ஊழியர் பார்த்தார். அதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் 70 சதவீதம் உடல் கருகி இறந்து கிடந்த ஜூலியனின் உடலைக் கைப்பற்றினர்.
அவரது அறையில் மருந்துகள் மற்றும் ஆல்கஹால் கலந்த இருமல் மருந்து இருந்தது. சிகரெட்டில் இருந்து அறையில் தீப் பற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெர்மன் தூதருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தரப்பட்டுள்ளது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply