இலங்கை, இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தடைப்பட ஜெயலலிதாவே காரணம்
இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெயலலிதாவின் தமிழக நிர்வாகத்தின் காரணமாக நடைபெறாமல் போனது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ. கே. வாசன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஜனவரி 27ஆம் திகதியன்று இலங்கை இந்திய மீனவர்கள் சென்னையில் சந்தித்து பேசினர். இதன்போது கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பில் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவது என்று இரண்டு தரப்பும் இணங்கியிருந்தன.
மத்திய அரசாங்கம் இதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தபோதும், தமிழக அரசாங்கத்தின் நிபந்தனைகள் காரணமாகவே பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது என்று வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply