எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இறுதிக் கட்ட யுத்தத்தில் செயற்படவில்லை : சரத் பொன்சேகா
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்த களத்தில் இந்திய இராணுவம் இருந்ததாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இறுதிக் கட்ட யுத்தத்தில் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்திய இராணுவம் யுத்தக் களத்தில் இருந்ததாகத் தெரிவித்து இந்திய உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் ´பிபிசி சந்தேசியா´விற்கு கருத்து வெளியிடுகையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அனுமதி இன்றி வேறு நாட்டுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவது அரசியல் யாப்பை மீறும் செயல் என டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தத்தில் இந்திய இராணுவம் பங்கேற்றமைக்கான சாட்சி இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்நிலையில், உலகில் உள்ள பல நாடுகளின் ஊடாக தமக்கு தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் சில நாடுகள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தத்திற்கு இந்தியா இடையூறு ஏற்படுத்தவில்லை என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply