நிதி உதவியை கனடா அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது : இலங்கை
நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை கனடா ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கும் நிதி உதவிகளை ரத்து செய்வது கனடா அறிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாமையே இவ்வாறு நிதி உதவிகள் ஒதுக்கப்படுவதற்கான காரணம் என கனடா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவின் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களையே பாதிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அரசியல் பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றின் மூலமே சுமூகமான தீர்வு காணப்பட முடியும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. பண பலத்தைப் பயன்படுத்தி நிறுவனமொன்றின் அல்லது அமைப்பு ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் முனைப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடாவின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply