சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்: மோடி தாக்கு

மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்திற்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கருத்து யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்துவிட்டார்’ என மோடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அகமதாபாத்தில் தனது 3டி பிரசாரத்தில் மோடி பேசியதாவது:- இந்திய பொருளாதாரத்தை என்கவுன்டர் செய்த உங்களுடைய ‘என்கவுண்டர் மந்திரி’ தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்து விட்டார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மறுவாக்கு எண்ணிக்கையை வலியுறுத்திய மந்திரி, தற்போது அந்த மறுவாக்கு எண்ணிக்கை கூட அவருக்கு உதவப் போவதில்லை என்பதால் தேர்தல் களத்தில் இருந்து விலகி ஓட முடிவு செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அகமதாபாத்தில் இருந்து 3டி ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் பிரசாரம் செய்த மோடியின் பேச்சு 100 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply