TNA எம்.பி. ஒருவரை காணவில்லையாம் வன்னி மக்கள் முறைப்பாடு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு சார்பில் மூன்று உறுப்பினர்கள் பா¡ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கல நாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் வினோ எம்.பியை காணவில்லை என வன்னி மக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கந்தையா சுப்பிரமணியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்.
வன்னி தேர்தல் தொகுதியில் நாங்கள் மூன்று எம்பிமாரை தெரிவு செய்தும். ஆனந்தன் எம்.பி. அடிக்கடி வந்து போறார். அவருடைய இரண்டு பேர் இங்க மாகாண சபைக்கு தெரிவாகி இருக்கினம். அதால இங்க ஒரே வாறார். செல்வம் எம்பி எப்பாவது இருந்திட்டு வருவார். அவர் இந்தியா விவகாரம் கையாள்வதால் நாம் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. ஆனா இந்த வினோவைத் தான் கன நாளாக காணவில்லை. கடைசியா மாகாணசபைத் தேர்தல் மூட்டம் வந்தவர். இப்ப ஆள் இல்லை. வவுனியா, மன்னார் என எல்லா இடத்திலும், விசாரித்திட்டம் அங்கேயும் அவர் இல்லை என்கிறார்கள்.
மற்ற உறுப்பினர்களிட்டயும் கேட்டனான்கள், அவர்கள் அவரை தெரியாத மாதிரி கதைக்கிறார்கள். ஒரு வேளை மறந்திருப்பாங்களோ தெரியாது. நாம் வாக்கு போட்ட படியா மறக்கேல. வாற கிழமையும் பார்த்திட்டு அவரை கண்டு பிடிக்குமாறு கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply