விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து சிறுவன் பயணித்த அதிசயம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து ஹவாய் நோக்கிப் பயணித்த விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து 16 வயது சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பயணித்த சிறுவன் உயிருடன் பாதுகாப்பாகத் தரையிறங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் சுட்டிக்காட்டுகின்றன. உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாய் பொலிஸார் தெரிவித்தனர். ஹவாயின் மோயி விமான நிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்தப் பையன் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த விமானம் பசுபிக் சமுத்திரத்தைக் கடந்து 39,000 அடி உயரத்தில் பறந்து பயணத்தை மேற்கொண்டிருந்த போது குறித்த சிறுவன் போதியளவு ஒட்சிசன் இல்லாமல் மயங்கியிருந்த அந்தப் பையனுக்கு விமானம் தரையிறங்கும் போது நினைவு திரும்பியுள்ளது.
அவன் உயிருடன் இருக்கிறான் என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் என்று ஹவாய் ஏர்லைன்ஸ் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி குறித்த சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1947 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து பயணித்த 96 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பயணித்தவர்களில் 73 பேர் உயிரிழந்திருப்பதுடன் 23 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
ஆகக் குறைந்த வயதாக 09 வயதுடைய ஒருவர் பயணித்துள்ளமையும் குறிப்பிட த்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply