புலி ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ் கணினி ஆசிரியர் கைது
விடுதலை புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கித்தின் பொருட்டு சுவரொட்டிகளை அச்சிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கணினி ஆசிரியர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாணிப்பாயில் அமைந்துள்ள அவரது கணினி நிறுவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர்.
அத்துடன் அங்குள்ள கணினிகள், மடி கணினிகள் பலவும் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply