உக்ரைனுக்கு அமெரிக்கா 50 மில்லியன் டாலர் நிதியுதவி
உக்ரைனில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை சிறப்படையவும் நிதியுதவியாக அமெரிக்க அரசு 50 மில்லியன் டாலர் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து துணை ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “உக்ரைன் நாட்டில் போதுமான வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு அமெரிக்க அரசு உறுதுணையாக இருக்கும். மேலும் உக்ரைனில் வளமான எதிர்காலத்தை உருவாக்க போதுமான வசதிகளை செய்யவும் எங்களது அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply