சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை; பிரபாகரன் குடும்பத்தினருடன் எம்முடனே உள்ளார் : புலிகளின் பேச்சாளர் திலீபன்
பாகிஸ்தான் லாகூரில் நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென புலிகளின் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய எந்த அமைப்புடனும் தமக்குத் தொடர்பில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் பேச்சாளர்களில் ஒருவரான திலீபனிடம் இந்தத் தாக்குதல் தொடர்பாகவும் இலங்கை வடபகுதி நிலைமை குறித்தும் அவுஸ்திரேலிய வானொலிச் சேவையினர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இந்தப் பேட்டி நேற்றிரவு ஒலிபரப்பானது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திலீபன், எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்களை வெளியேற்றுவது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன் வைத்துள்ள கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
தற்போது எமது கட்டுப்பாட்டில் நான்கு பிரதேசங்களே உள்ளன. மாத்தளம், பொக்கரணை, முள்ளியவாய்க்கால், புதுமாத்தளம் ஆகிய நான்கு பிரதேசங்களே அவை.
எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்கள் உணவு மற்றும் குடிநீர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனரென்பதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இரு சிறுவர்கள் உட்பட பதினாரு பொதுமக்கள் இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது மனைவி, பிள்ளைகளும் இன்னும் எம்முடனேயே உள்ளனரெனுவும் திலீபன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply