அஸ்வர் எம்.பி.யின் சிறப்புரிமை மிக மோசமாக மீறப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் சபையில் தெரிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரின் சிறப்புரிமை மோசமாக மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். செயல்நுணுக்கக் கருத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் ஹறாமான செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஊடகமொன்று (லேக் ஹவுஸ் ஊடகங்களல்ல) செய்தி வெளியிட்டிருப்பது குறித்து ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. நேற்று சபையில் சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கெசினோ மற்றும் சூதாட்டங்கள் ஹராம் எனவும் அதற்கு நான் உட்பட 4 ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டது. செயல் நுணுக்க கருத்திட்டத்தில் கெசினோ கிடையாது என ஜனாதிபதி தெளிவாக அறிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்வும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையிலே அந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களி த்தோம்
ஆனால் நாம் பின்பற்றும் மதத்தை அவமானப்படுத்தும் வகையில் குறித்த பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இது எமது சிறப்புரிமையை மீறும் செயலாகும். இது குறித்து பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவினூடாக விசாரிக்குமாறு கோருகிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply