அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் கோருதல் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விதத்தில் தண்டனை : நவநீதம்பிள்ளை

இலங்கையில் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோருதல் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விதத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

யுத்த பிரதேசத்தில் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், ஏனைய கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட சகலரும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரும் சிவிலியன் பாதுகாப்பை முதனிலைப்படுத்தி செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக உருவாகியுள்ள அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் போன்ற சகல பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தனது முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது நவனீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply