இனப்பிரச்சினைத் தீர்வு; அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை : அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல 

இனப்பிரச்சினைக்கு பாராளு மன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே இறுதித் தீர்வு எட்டப் படவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல் லையென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்வொன்று குறித்துப் பேசுவதாயின் அரசாங்கம் அவர்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக மாத்திரமே இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்கனவே பல தடவைகள் அழைப்பு விடுத்துள்ளோம். இந்தியா உட்பட பல நாடுகளும் அவர்களை தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர்கள் இதுவரை தெரிவுக்குழுவிற்கு வரவில்லை.

அதேநேரம், தென்னாபிரிக்காவின் உண்மையை அறியும் குழுவின் அனுபவங் களைப் பெற்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவிருந்தாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சகல தரப்பினருடனும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும். எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் இறுதியில் அது பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். எனவே ஆரம்பத்திலிருந்தே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக பேச்சுவார்த்தை களை முன்கொண்டு செல்வது சிறந்ததாக அமையும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply