பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய மாட்டேன் : ஜனாதிபதி
பயங்கரவாதத்தினால் பறிக்கப்பட்ட இளைஞர்களின் அனைத்து உரிமைகளை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என டுவிட்டர் சமூக வலையமைப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மத அமைதியின்மை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, “எந்தவொரு வடிவத்திலான அமைதியின்மைக்கும் நான் இடமளிக்க மாட்டேன். இங்கு மதங்கள் அடிப்படையிலான வன்முறைகள் ஒரு போதும் இருந்ததில்லை. சில சம்பவங்கள் இருந்திருக்கலாம்” என கூறியுள்ளார்.
டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் வருமாறு:
கேள்வி: உலகத்திலிருந்து இலங்கையை இளைஞர் விவகாரத்தில் எது வித்தியாசப்படுத்துகின்றது? எவ்வகையான முன்னேற்றம் இன்னும் தேவை என்று கருதுகின்அர்கள்?
பதில்: சமாதானத்தில் இளைஞர்களே முக்கியமானவர்கள். அவர்களுக்கு இலவசக் கல்வியும் முன்னேற்றத்திற்கான வழியும் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: மேலைத்தேய நாடுகள் எவ்வாறு இளைஞர் விவகாரத்தில் அர்ப்பணிப்புடன் எதிர்கால இளைஞர் விவகார பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று நீங்களும் உங்கள் சகாக்களும் நம்புகின்அர்கள்?
பதில்: நாங்கள் எவருக்கும் திறக்கப்பட்டே உள்ளோம். அதற்கான சிறந்த சான்றாக இந்த மாநாட்டை குறிப்பிடலாம்.
கேள்வி: விசேட தேவையுள்ளோர் எப்போது இளைஞர் செயற்பாடுகளின் பிரதான நிகழ்ச்சி நிரலுக்கு வருவார்கள்? ஏன் அவர்கள் எப்போதும் புறந்தள்ளப்படுகின்றனர்?
பதில்: மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் எம்மிடம் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. நாம் அந்தக் கொள்கையில் கடுமையாக இருக்கின்றோம். அண்மையில் மாற்றுத் திறனாளிகள் ஆறு பேரை மத்தியவங்கி ஆட்சேர்ப்பு செய்துள்ளது.
கேள்வி: வேலையின்மையை ஏற்படுத்தக்கூடிய இளைஞர்களின் குறைபாடுகள் என்ன என்று கருதுகின்அர்கள்? விசேடமாக இலங்கையை பொறுத்தவரை?
பதில்: தொழில் சந்தைக்கு தேவைப்படுகின்ற திறமை முன்வைக்கப்படுவதை நாம் காணவில்லை. சில தவறான எண்ணங்கள் காரணமாக சந்தையில் காணப்படுகின்ற தொழிலுக்கு இளைஞர்கள் அக்கறை செலுத்தவில்லை என்பது தெரிகின்றது.
கேள்வி: வடக்கு, கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் விசேட தேவையை நிறைவேற்ற உங்கள் அரசாங்கம் கருத்திற் கொண்டுள்ள விடயங்கள் என்ன?
பதில்: இந்த இளைஞர்களின் அனைத்து உரிமைகளையும் பயங்கரவாதம் பறித்துவிட்டது. அந்த உரிமைகளை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக 2013ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு வடக்கில் இருந்தே வந்தது. இது எமது வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகும்.
தெற்கில் இருக்கின்ற பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற அனைத்து வசதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கும் வழங்கப்படுகின்றது. விசேடமாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இது செய்யப்படுகின்றது.
கேள்வி: தீர்மானம் எடுப்பதில் இளைஞர்களை பங்கெடுக்க வைப்பதற்கு உங்கள் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பதில்: இளைஞர் பாராளுமன்றம் அதில் ஒன்றாகும். எனது ஒவ்வொரு வரவு வரவுசெலவுத் திட்டத்திலும் நான் பெண்களையும் யுவதிகளையும் கலந்தாலோசிப்பேன்.
பெண்கள் முன்வைக்கின்ற அதிகமான யோசனைகள் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. எனது அரசாங்கத்தில் மிக அதிகமான இளம் எம்.பிக்கள் உள்ளனர். ஏனைய அரசியல் அமைப்புக ளிலும் உள்ளனர்.
கேள்வி: 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான முழுமையான இலக்கு அவசியம் என்று பொதுநலவாய இளம் அமைச்சர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். உங்கள் கருத்து?
பதில்: சட்டக்கல்லூரியின் வயது தடையானது இறுதிப் பரீட்சைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி: இதனைத் தீர்ப்பதற்கு?
பதில்: அதனை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். விரைவில் இதற்கு தீர்வொன்றை வழங்குவதற்கு எதிர்பார்க் கின்றோம்.
கேள்வி: குறைந்த செலவில் கல்வி பெற்றுக் கொள்வது அடுத்த முக்கிய விடயமாகும். இலங்கையில்?
பதில்: எமது கல்வித்திட்டத்தை நாம் பாரியளவில் முன்னேற்றிவருகின்றோம். நாட்டில் சிறந்த 1000 பாடசாலைகளுக்கு சிறந்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: பல்கலைக்கழக மாணவர்கள் 2006ஆம் ஆண்டிலிருந்து 2500 ரூபாவையே பெறுகின்றனர். ஏதாவது அதிகரிப்பை எதிர்பார்க்கலாமா?
பதில்: ஆம். நாம் தீவிரமாக இந்த விடயத்தை கருத்திற் கொண்டுள்ளோம்.
கேள்வி:- 10 வீதமான மாணவர்கள் உதவிகளை பெறுவதற்கு அதிகம் தகுதியானவர்கள் என கணிப்பீடுகள் கூறுகின்றன. இந்த மாணவர்கள் கணிசமான அதிகரிப்பை பெறுவார்கள்.
கேள்வி: பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தடை செய்யும் நோக்கம் உள்ளதா?
பதில்: எனக்கு பேஸ்புக்கில் 3 இலட்சம் விருப்புகளும் டுவிட்டரில் 25 ஆயிரம் பேர் பின்பற்றுனர்களாக உள்ள நிலையில் நான் ஏன் அவற்றை தடை செய்ய வேண்டும்? எவ்வாறு என்னால் அது முடியும்? இவற்றை நான் தடை செய்தால் வீட்டில் மக்களிடமிருந்தே புரட்சி வந்துவிடும்.
கேள்வி: இந்த ஆசிர்வதிக்கப்பட்ட நாட்டில் மத அமைதியின்மையை மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
பதில்: எந்தவொரு வடிவத்திலான அமைதியின்மைக்கும் நான் இடமளிக்க மாட்டேன். இங்கு மதங்கள் அடிப்படை யிலான வன்முறைகள் ஒருபோதும் இருந்ததில்லை. சில சம்பவங்கள் இருந்திருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply