சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கடியில் 125 மைல் தூரம் கடந்து செல்லும் பயணமும் அடங்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரு நாளில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரெயில் சைபீரியா வழியாக ரஷ்யாவுக்குள் சென்று பின் அலாஸ்காவை கடல் வழியாக இணைக்கும் பெரிங் ஜலசந்திக்குள் நுழையும். கடலுக்கடியில் 125 மைல் சுரங்கப்பாதை வழியாக பெரிங் ஜலசந்தியை கடந்து அந்த ரெயில் அலாஸ்காவை சென்றடையும். பின்னர் மீண்டும் தரை வழியாக அலாஸ்காவிலிருந்து கனடா சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா ஆகிய அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளனவா என தெரியவில்லை. வான் வழியாக செல்லும் திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் மூலம் தரை வழியாகவே சென்றடையலாம் என்ற சிறப்பம்சம் கொண்ட திட்டமாக இது இருக்கும் என பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகின் மிக நீண்ட ரெயில் பாதை கொண்டதாக இது திகழும். கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை அமைக்கப்பட்டால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனை இணைக்கும் கடலுக்கடி ரெயில் பாதையை விட நீண்ட ரெயில் பாதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படாவிட்டாலும், அதி வேக ரெயில் திட்டங்களில் உலக அளவில் சாதனையாளராக திகழும் சீனாவின் நிதியுதவியின் மூலம் இது நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது. சீனாவில் தற்பொழுது 6200 மைல் தூரத்திற்கு புல்லட் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply