போரில் கொல்லப்பட்டவர்களின் படங்களை தங்களது வீடுகளில் வைத்து நினைவுகூர எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை : ரூவன் வணிகசூரியா
இலங்கையின் வடக்குப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தை பொது இடத்தில் அனுசரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கொழும்பில் அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வணிகசூரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தை பொது இடத்தில் வைத்து அனுசரிக்க, வடக்குப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், போரில் கொல்லப்பட்டவர்களின் படங்களை தங்களது வீடுகளில் வைத்து குடும்பத்தினர் நினைவுகூர எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பொது இடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க சிறப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.
இதுகுறித்து தமிழ் அமைப்பினர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தினம் அனுசரிக்கக் கூடாது என்பதற்காக, பல்கலைக்கழகத்தை அதிகாரிகள் மூடி விட்டனர்’ என்று கூறினர்.
விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 30 ஆண்டுகளாக நீடித்த போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இதனை மாத்தறையில் வெற்றி தினமாகக் கொண்டாட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply