பேலியகொடை நகர சபை உறுப்பினர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை

ஐக்கிய மக்கள் சுத ந்திர முன்னணி யின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் சமில சந்தருவன் இனந் தெரியாத ஆயுததாரிகளின் துப் பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழ ந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம டைந்துள்ளார். தளுகம, டயர் சந்தி பகுதியில் நேற் றுக் காலை 11.25 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரி வித்தார். நகரசபை உறுப்பினர் தனது காரை செலுத்திக் கொண்டி ருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்று ள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நகர சபை உறுப்பினர் காரில் துப் பாக்கிச் சூட்டு காயங்களுடன் வீழ்ந்து உயிரிழந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவரது நண்பர் படுகாயமடைந்த நிலையில் மீட் டெடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மஹர நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு தனது நண்பரான சங்க என்பவருடன் காரை ஓட்டிய வண்ணம் திரும்பிக் கொண்டிருந்த நகர சபை உறுப்பினர் தளுகம பிரதேசத்தை அண்மித்த போது சாரதி ஆசனத்திற்கு அருகில் நெருக்கமாக மொட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நகர சபை உறுப்பினரின் தலை மற்றும் மார்ப்புப் பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் நுழைந்துள்ளதுடன் நகர சபை உறுப்பினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரது நண்பர் படுகாயமடைந் துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து இரத்த காயங்களுடன் வெற்றுத் துப்பாக்கி ரவைகளையும் பொலிசார் கண்டெடுத் துள்ளனர்.

மஹர மஜிஸ்திரேட் நீதவான் தர்ஷிகா விமலசிறி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணைகளை நடத்தியதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply