வெசாக் வழிபாட்டு நிகழ்வுகளில் 30 இலட்சம் மாணவர்கள் பங்கேற்பு

வெசாக் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேசிய. மாகாண மட்ட பாடசாலைகளில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த சமய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கொழும்பிலுள்ள பல பாடசாலைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேரடியாக விஜயம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடி னார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் கலவன் பாடசாலை களில் வெசாக் சமய வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்ற போது பெளத்த மாணவர்களுக்கு ஏனைய சமய மாணவர்கள் உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்கினர்.

கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு முதலில் விஜயம் செய்த ஜனாதிபதி, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தியான வழிபா டுகளில் ஈடுபட்டிருந்த மாணவர் களை சந்தித்து அவர்களுடன் சில நிமிடங்களைச் செலவிட்டார்.

அதனையடுத்து கொழும்பு சென். போல் மகளிர் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி; அங்கு ‘சில்’ வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவிகளுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி யுள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி; அங்கு தர்ம உபதேசத்துக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மாணவர்களுடன் சில நிமிடங்களை செலவிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 20,000 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வெசாக் தினத்தையொட்டி சமய வழிபா டுகளில் ஈடுபட்டனர். பிள்ளைகளுக்கிடையில் சமய சக வாழ்வை மேம்படுத்தும் நோக் கிலேயே இந்த நிகழ்வுகள் கல்வியமைச் சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரும் ஒன்றிணைந்து இந்த சமய நிகழ்வுகளை நடத்தினர்.

பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகழ்ச்சியுடனும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்வாக இந்த நிகழ்வுகள் அமைந்திருந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply