புத்த பெருமானின் போதனைகள் முழு உலகத்திற்கும் சிறந்த வழிகாட்டு: ஜனாதிபதி
புத்த பெருமானின் போதனைகள் முழு உலகிற்கும் சாந்தியைப் பெற்றுக்கொடுப்பவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வெசாக் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரி நிர்வாணமடைதல் போன்ற மூன்று நிலைகளையும் நினைவு கூரும் வெசாக் பண்டிகை இவ்வருடம் பூரண அரச அனுசரணையுடன் நாடு முழுவதும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுகிறது.
இந்த வெசாக் உற்சவம் பெளத்த மக்களாகிய எமக்கு மட்டுமன்றி உலகத்தில் வாழும் அனைத்து பெளத்த மக்களாலும் போற்றப்படுகின்ற புண்ணிய மகோற்சவமாக கருதப்படுகிறது.
நிச்சலத்துடன் புத்த பெருமானின் போதனைகளுடன் உயிரினும் மேலாக நாம் போற்றி வந்த எமது உள்ளங்கள் இந்த வெசாக் மாதத்தில் அவர் எம்முடன் உயிருடன் இருக்கின்றார் என்பதை எண்ணி எமது மனம் பூரிப்படைகிறது.
குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.
இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.
புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
புத்த பெருமானின் போதனைகளின் படி எங்களை தயார் படுத்திக் கொண்ட நாம் எமது வாழ்க்கை அனுபவத்தின்படி நூறு வருடங்கள் வாழ்வதை விட மிக ஊக்கத்துடன் ஒரு நாள் வாழ்வதே மேலாகும்.
எனவே இந்த வெசாக் மாதத்தில் சற்றும் தாமதிக்காமல் புண்ணியங்களை அதிகளவில் சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம் எனவும் ஜனாதிபதி தமது வெசாக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply