இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமனம்

இந்திய ராணுவத்தின் தளபதியான பிக்ரம் சிங்கின் பதவிக் காலம் ஜூலை ‌31ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை மத்திய அரசு இன்று நியமித்துள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து மத்திய அரசு இதற்கான முடிவை எடுத்துள்ளது. தற்போது ராணுவ துணைத் தளபதியாக பொறுப்பு வகிக்கும் தல்பீர் சிங் சுஹாக், சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார். பிக்ரம் சிங் ஓய்வு பெறும்போது, இந்திய ராணுவத்தில் சுஹாக்தான் மிகவும் மூத்த லெப்டினன்ட் ஜெனரலாக இருப்பார்.

ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் இதுபோன்ற மிகப்பெரிய முடிவை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், ராணுவ தளபதி நியமனம் மற்றும் பிற நியமனங்கள் தொடர்பான முடிவை புதிய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கருத்து தெரிவித்தது. ஆனால், இதனை காங்கிரஸ் தலைமையிலான அரசு புறக்கணித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply