சவுதியில் மெர்ஸ் நோய்க்கு மேலும் 5 பேர் பலி
சவுதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகளில் மெர்ஸ் என்னும் உயிர்கொல்லி நோய் வேகமாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்னும் நோய் உலகம் முழுவதும் பரவி பல ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது. அதே போன்று மெர்ஸ் நோயும் ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சவுதி அரேபியாவுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் மட்டும் 500க்கும் அதிகமானவர்கள் மெர்ஸ் நோய்க்காக சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மூன்று பெண்கள் உள்பட 5 பேர் இறந்து விட்டதாக சவுதி சுகாதாரத் துறை நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து, மெர்ஸ் நோய்க்கு பலியான சவுதிவாசிகளின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply