பாகிஸ்தான் மத நிந்தனை செய்ததாக 6 பேர் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானில், மத நாள்காட்டியைக் கிழித்து மத நிந்தனையில் ஈடுபட்டதாக அஹமதி என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஷார்க்பூர் என்ற கிராமத்தில் உள்ள கடை ஒன்றில், பணியாளருடன் மத ரீதியிலான வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 பேர் அங்கிருந்த மத நாள்காட்டியைக் கிழித்ததாக போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, அல் சுன்னத் வால் ஜம்மத் என்ற பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் லாகூர்-ஷார்க்பூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக ஷார்க்பூர் பகுதியில் உள்ள அஹமதி பிரிவினர், முஸ்லிம்களால் தாக்கப்படும் அச்சத்தால் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply