பாகிஸ்தானுக்கு வருமாறு மோடிக்கு நவாஸ் ஷரீப் அழைப்பு
இந்தியாவின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு மோடியை அழைத்துள்ளார். ஏற்கனவே, பிரதமர் மன்மோகன் சிங்கை தங்கள் நாட்டுக்கு வருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்ட நிலையில், புதிய பிரதமர் மோடியுடன் சுமுக உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கருத்து பேதங்களையும், பழையப் பகையையும் சரி செய்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முன்முயற்சியாக நவாஸ் ஷரீப்பின் இந்த அழைப்பு கருதப்படுகிறது.
மோடியின் பாகிஸ்தான் பயணம் தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நிறைய இருப்பதாகவும், அவை நிறைவடைய சில காலம் ஆகலாம். எனினும், சம்பிரதாய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் நவாஸ் ஷரீப்பின் தேசிய ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply