இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்த மோடி விருப்பம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு டுவிட்டரில் செய்தி

இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான உறவை வலுப்படுத்த விரும்புவதாக இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜனாதிபதிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய பொதுத் தேர்தலில் பா. ஜ. க. வெற்றியீட்டியதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட துடன், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பும் விடுத்தார். இதனை டுவிட்டரிலும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் போதே நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் முதன் முதலில் உரையாடிய உலகத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமது பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ள உலகத் தலைவர்கள் பலருக்கும் மோடி தமது டுவிட்டரில் நன்றிகளை பதிவு செய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply