லிபியாவில் உள்ள சவுதி தூதரகம் மூடப்பட்டது

லிபியா பாராளுமன்றம் மீது நேற்று போராளிகள் நடத்திய ஆக்ரோஷ தாக்குதலில் இருவர் பலியாகினர். இதேபோல். நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு விமானப்படை தளம் மீதும் போராளிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். லிபியாவில் நாளுக்கு நாள் அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, தனி மனித பாதுகாப்புக்கு உத்திரவாதமற்ற நிலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் தலைநகர் திரிபோலியில் உள்ள தனது நாட்டின் தூதரகத்தை சவுதி அரேபியா மூடியுள்ளது. லிபியாவில் உள்ள போராளி குழுக்கள் தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக கூறும் சவுதி வெளியுறவுத் துறை அதிகாரிகள், லிபியாவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தூதரக அதிகாரிகள் வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

லிபியாவின் உள்நாட்டு நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் தூதரக அதிகாரிகள் அங்கு திரும்புவார்கள். தூதரகம் தொடர்ந்து செயல்பட துவங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply