துருக்கி நிலக்கரிச் சுரங்க விபத்து விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது

துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 301 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சோமா நிலக்கரி சுரங்க நிறுவன பொது மேலாளர், தலைமை அதிகாரி, நிறுவன உரிமையாளரின் மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக 26 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் இதில் 8 பேர் மீது சந்தேகம் வலுப்பட்டதை அடுத்து மீதம் உள்ளவர்களை விடுதலை செய்தனர். ஆனால் இதுகுறித்து வழக்கு விசாரணை பின்னர் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதல்கட்ட தகவல்படி இது ஒரு விபத்து என்றும் காற்றில் தீ பரவியது என்றும் வக்கீல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply