26ஆம் தேதி நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கிறார்
இந்தியாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி திங்கட்கிழமை பதவி ஏற்பார் என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.எதிர்பார்க்கப்பட்டதுபோல நரேந்திர மோடியை தமது நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் பிரதமர் பதவிக்குரியவராகவும் தேர்ந்தெடுத்திருந்தது. குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடி தற்போது இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு முறைப்படி உரிமை கோரியிருந்தார்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை பாரதிய ஜனதா கட்சி தனித்தே பெறுவதாக சென்ற வாரம் வெளியான தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆசனங்களை வெல்வதென்பது இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply