விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை : OHCHR

சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மே;றகொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயலகள் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை நியமிக்க உள்ளார்.

இந்த விசாரணைகை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதும், உத்தியோகபூர்வமாக எவ்வித மறுப்புக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழுவின் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும், குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவே இலங்கை அறிவித்து வருவதாகவும் அவர் சுட்டி;காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply