காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவம் இலவசப் பயிற்சி
ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு உதவும் விதமாக ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக உணவு, இருப்பிட வசதியுடன் கூடிய இலவசப் பயிற்சி முகாமுக்கு ராணுவம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சனாப் பள்ளத்தாக்கின் டோடா, ராம்பாண் மற்றும் கிஷ்த்வார் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக “சனாப் சூப்பர்௩0′ என்ற இலவசப் பயிற்சி முகாமை தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ராணுவத்தின் டெல்டா படைப் பிரிவினர் நடத்துகின்றனர். உணவு மற்றும் இருப்பிட வசதியுடன் இலவசமாக இந்தப் பயிற்சி முகாம் 11 மாதங்கள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply