இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டும்
இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு தீவிரவாதம் தொடர்பில் நல்ல அனுபவம் இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு மாநில அரசாங்கமும் தலையிட முடியாது. குறிப்பாக இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழகத் தலைவர்கள் எவரும் தலையிடக்கூடாது. இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமாயின் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனைச் செய்யவேண்டும்.பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் அதிகாரம் கிடையாது. இறைமையுள்ள நாட்டின் ஜனாதிபதியொன்ற ரீதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்ப்டடுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கே உள்ளது. இந்திய அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவாகியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிராந்திய நாடுகளுடன் நட்புறவுக் கொள்கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களின் நலன்புரிக்கு தமிழக அரசியல்வாதிகளும் தமிழக அரசாங்கமே பொறுப்பு என ஏன் கூறவேண்டும். அங்கு வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கம் உள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிட வேண்டாம் என வடமாகாண முதலமைச்சர், இந்திய அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகிறார். இலங்கையிலுள்ள தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் பிரச்சினையை மேலும் அதிகரிப்பார்கள் என்பதாலேயே அவர் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் சுப்ரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply