மன்னாரில் 1208 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்!
மன்னாரில் 1208 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் மன்னாரை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிய சிங்களக் குடும்பங்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது என மாவட்டச் செயலாளர் எம்.வை.எம். தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.60 வீதமான முஸ்லிம் மக்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது சிங்கள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் சிங்கள மக்களை மீள் குடியேற்றுவதற்காக 560 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் தங்கியிருந்த தமிழ், முஸ்லிம் சிங்கள மக்கள் எவ்வித அழுத்தங்களும் இன்றி மன்னாரில் மீள்குடியேற முடியும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மன்னார் மாவட்டச் செயலாளர் தேப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply