ஆப்கானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இந்திய படை வீரர்களும். ஆப்கான் இராணுவத் தினர்களும் இதன்போது திருப்பித் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் ஹீராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது நேற்று அதிகாலை 3.25 மணி அளவில் 4 தீவிரவாதிகள் தூதரக அலுவல கத்திற்குள் நுழைய முயன்றனர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்த இந்திய ஐ, டி. பி. பி. படை வீரர்களை (இந்திய திபெத்திய எல்லை படை) குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு இராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக ஆப் கானிஸ்தான் இராணுவமும் சம்பவ இடத் திற்கு விரைந்தது.

தூதரகம் இருந்த இடத்திற்கு 150 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் வந்தனர். இராணுவ வீரர்கள் இந்திய தூதரக அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த மக்களை உடனடியாக வெளியேற்றினர். தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய படையுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களும் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே அங்கு நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது.

இச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப் பட்டது. இந்திய திபெத்திய எல்லைப்படை வீரர்கள் ஒரு தீவிரவாதியையும். ஆப்கான் இராணுவம் 3 பேரையும் சுட்டுக்கொன்றது. இதில் இந்திய தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய திபெத்திய எல்லைப் படையின் இயக்குநர் சுபாஷ் கோஷ்வாமி தெரிவித்துள்ளார்.

நமது தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இத்தகைய தாக்குதல் நடத்தக்கூடும் என்று புலனாய்வு தகவல்கள் கிடைத்தது. மற்றும் நாங்கள் அதனை எதிர்கொள்ள எங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரிடம் பேசினார். அப்போது அங்குள்ள நிலை குறித்து விசாரித்தார். அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி திங்கட்கிழமை பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply