சிரிய ஜனாதிபதி அஸாத்தின் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுத்தாக்குதல் : 22 பேர் பலி
தென் சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் – அஸாத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்ததில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். டெரா நகரிலுள்ள கூடாரமொன்றில் அஸாத்தின் ஆதரவாளர்கள் வியாழக்கிழமை மாலை கூடிய போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி அஸாத் கலந்து கொள்ளவில்லை.சிரியாவில் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தேர்தலில் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக இருவர் போட்டியிடுகின்ற போதும், அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெரா நகரின் அல் – மதார் பிரதேசத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 11 பொதுமக்களும் அரசாங்க ஆதரவு போராளிகளும் உயிரிழந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply