கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். ஏதென்ஸ் நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து 400 கிலோ மீட்டர்கள் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதம் குறித்தும் வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply