கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் ஒருபோதும் இடமாற்றப்படாது பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க

கிராண்ட்பாஸ், மோலவத்தை முஸ்லிம் பள்ளிவாசல் ஒருபோதும் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படமாட்டாதென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனா நாயக்க கூறியுள்ளார்.பிரதி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், மத்திய கொழு ம்பு ஸ்ரீ.ல சுதந்திரக்கட்சி அமைப்பாள ருமான பைஸர் முஸ்தபா. பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க ஆகியோர் நேற்று சுவர்ணசைத்திய வீதி, மோலவத்தை மக்களுடனும். அப்பகுதி கோவில்களின் தலைமை மதகுருமாருட னும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மோலவத்தை பள்ளிவாசல் அபிவிருத்திப் பணிகளை விரைவில் பூர்த்தி செய்வதாகவும், அப்பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்காக பகுதியிலுள்ள விகாரைகளின்தலைமைப் பிக்குமாரினதும். மக்களினதும் பூரண ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

புனரமைக்கப்படும் பள்ளிவாசல் ஒருபோதும் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்படமாட்டாது.

புனரமைப்பின் ஊடாக முஸ்லிம்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள சகல வசதிகளும் கிடைக்குமென்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை குறைவதற்கு நான் இடம்வைக்கமாட்டேன்.

இன, மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படுமாறும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பிரதேசவாசிகளும். மாநகர சபை உறுப்பினர் எம். எச். மன்ஸிலும் இதில் பங்குபற்றினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply