ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் கால்பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் கால்பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. சிறந்த ஆளுமை, துணிவு, அரசியல் சாணக்கியம் மிக்க தலைமைத்துவத்திற்குப் பாத்திரமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் பிறந்த கிருவாபத்துவ என்ற இடத்துக்கு மட்டுமின்றி முழு இலங்கைக்கும் உரித்தான கெளரவ தலைவராகத் திகழ்கிறார். 30 வருடகால பயங்கரவாதத்தை முடித்து நாட்டில் அமைதியை நிலை நாட்டி சகல மக்களும் நிம்மதியாக வாழ வழிவகுத்த பெருமைக்குரிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். 1970ம் ஆண்டு மே 27ம் திகதி இன்றைய போன்றதொரு தினத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்தில் இருந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரும் அவரே.

1977ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் தோல்வியடைந்து சட்டக் கல்லூரியில் அனுமதிபெற்று 1977 நவம்பரில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதனையடுத்து தங்கல்லையில் சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். எனினும், அரசியலில் அவருக்கிருந்த ஆர்வம் குறையவில்லை. இதற்கிணங்க 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்த அவர், சிறுபராயம் முதற்கொண்டே சமூகத்தை நேசித்தவர், கிராமிய சம்பிரதாயங்கள் குணாதிசயங்களில் திளைத்திருந்தவர். சிறந்ததொரு மக்கள் பிரதிநிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் தன்னை அடை யாளப்படுத்திக் கொண்டவர்.

பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராகப் பதவி வகித்து தற்போது நாட்டின் ஜனாதிபதியாக திகழ்கின்றார்.1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது மக்களுக்கு சேவை செய்வதற்கென அர்ப்பணிப்புடன் பாரிய சேவைகளைச் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இயலுமானது.

1994ஆம் ஆண்டிலிருந்து 1997ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தொழில் அமைச்சராக இந்த நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்துக்காக, அவர்களின் மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது இந்த நாட்டில் வாழுகின்ற மக்களின் நல் வாழ்வுக்காக இரவுபகலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

1997ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சராகப் பதவிவகித்தார்.

2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியுற்றது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இருந்தார். 2004ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் சேவைசெய்தார். 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியிலிருந்து இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராகப் பதவி வகித்தார். சுதந்திர இலங்கையின் 13வது பிரதமராக பதவிவகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பெருந்தெருக்கள் அமைச்சர் பதவியையும் வகித்திருந்தார்.

தனது அரசியல் வாழ்க்கையில் ஆரம்பத்தில் தொகுதி அமைப்பாளராகத் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். ஒரு சிறிய பகுதியினூடாக அரசியல் பிரவேசத்தைச் செய்த அவர் இன்று அதியுயர் பதவியாகிய அதிமேதகு ஜனாதிபதியென்கின்ற பதவிவரை முன்னேறி வந்திருக்கிறார். இந்த நாட்டிலுள்ள மக்களுடன் மிக நெருக்கமாக செயற்படுகின்ற நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான ஒரு தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு தலைவராகத் திகழ்கிறார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி சுதந்திர இலங்கையின் ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த நாட்டை யுத்தம் என்ற கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. அத்துடன் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுந்திருந்தன. அந்தத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தவர்களைவிட உச்ச வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 50.3 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளைப் பெற்று 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு மேலதிகமாக ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களின்படி முப்படைகளின் தளபதியாகவும் அவர் நியமனம் பெற்றார். 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவருக்கு ஒரு விசேட தினமாக அமைந்தது. அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றியைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் பெற்ற 7வது ஜனாதிபதியாக நியமனம் பெற்றார். இலங்கை என்கின்ற இந்த சிறிய நாட்டை உலக நாடுகள் மத்தியில் மிளிரச்செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செயற்பட்டார். தான் பிறந்த நாட்டுக்கும், தாய் நாட்டுக்கும் தன்னால் செய்யக்கூடிய அதிஉச்ச சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கினார்.

தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு அவர் வந்த பாதை ஒரு மலர்தூவிய பாதையல்ல. கற்களும் முற்களும் நிறைந்த ஒரு பாதையைக் கடந்தே அவர் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். உள்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் வருகின்ற அழுத்தங்கள், தடைகளைக் கண்டு சளைக்காமல் இருக்கும் இவருடைய தலைமைத்துவம் கருமேகங்களிடையே தென்படும் வெள்ளி ஒளிக்கீற்றுக்கள் போன்றது. எமது தனித்துவத்தை சர்தேசத்துக்குக் கொண்டுசென்ற ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

சர்வதேச சவால்களுக்கு மத்தியில் சளைத்துவிடாமல் எமது வெளிநாட்டுக் கொள்கையை நேரடியாக முன்னெடுத்துச் செல்பவர்.

வெள்ளைநிற தேசிய உடையில் தோன்றும் இவர், சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் நிற்கும்போது எமது நாட்டின் தனித்துவத்தைப் பிரதிபலித்துக்கொண்டிருப்பது தெளிவாகும்.

கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒற்றுமைப்படுத்தி நாட்டில் சமாதானத்தை நிலைபெறச் செய்த உலகத்தில் சிரேஷ்ட தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராளுமன்ற வாழ்க்கையில் 44 வருடங்களை இன்று பூர்த்தி செய்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply