13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சிறுமி சாதனை
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது. 52 நாட்களாக எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி தனது குழுவினருடன் நடைபயணத்தை துவக்கிய அச்சிறுமி காலை 5.53 மணியளவில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இதன் மூலம் மன உறுதி உள்ள எவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததை உணர்த்தும் வகையில் அங்கு அம்பேத்கர் படத்தை வைத்து விட்டு வந்துள்ளனர் பூர்ணாவும் அவரது நண்பரான சதனபள்ளி ஆனந்த் ஆகியோர். இதில் ஆனந்த் தலித் இனத்தை சேர்ந்தவராவார். ஆந்திராவின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள தட்வாய் கிராமத்தை சேர்ந்த பூர்ணாவின் பெற்றோர் பண்ணையில் ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர்.
150க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இவர்கள் இருவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply