ஃபேஸ்புக் நிறுவனருக்கு ஈரான் நீதிமன்றம் சம்மன்
ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனரும், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (சிஇஒ) மார்க் ஜகர்பெர்க்கை நேரில் ஆஜராகும்படி ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் நாட்டு அரசு துணை செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ள செய்தியில், “ஃபேஸ்புக்சமூக இணையதளத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஈரான் நாட்டினர், அந்த இணையதளத்தில் இருக்கும் இன்ஸ்ட்கிராம், வாட்ஸ் ஆஃப் ஆகிய வசதிகளின் செயல்பாடுகள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களின் தலையிடுவது போல் இருக்கிறது என குற்றம்சாட்டி பார்ஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈரானில் இன்ஸ்ட்கிராம், வாட்ஸ் ஆஃப் ஆகிய வசதிகளை முடக்கி வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், மார்க் ஜகர்பெர்க்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டது’ என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்துதல் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை. இதனால், ஈரான் நீதிமன்ற உத்தரவை ஏற்று, மார்க் ஜகர்பெர்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாரா? என தெரியவில்லை.
ஈரான் நாட்டில், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் அதிகாரப்பூர்வமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகர் டெஹ்ரான் உள்பட பல பகுதிகளிலும் அந்த இணையதளங்கள் மறைமுகமாக செயல்பாட்டில் உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply