இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தகவலை கேள்விபட்டதும் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தூதரரிடம் முறைப்படி பேசினார். அதைத் தொடர்ந்து இந்தோதிபெத்திய ராணுவ படை கமாண்டரை வீடியோ கான்பரசிங் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம், ‘‘பாய்ஸ், உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம். தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்’’ என்று உத்தரவிட்டு உற்சாகப்படுத்தினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அந்த 6 இந்திய ராணுவ வீரர்களும் நேற்று மோடியுடன் இரவு விருந்தில் பங்கேற்றனர்.
இந்த தகவல் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply