மதச் சுதந்திரத்தை தடுக்க யாருக்கும் உரிமையில்லை : சோமவங்ச
நாட்டில் வாழும் எல்லா சமூகத்தினருக்கும் அவர் அவர் சமயத்தைப் பின்பற்றவும் சமயக் கிரியைகளில் சுதந்திரமாக ஈடுபடவும் உரிமையுண்டு. அதனை யாரும் தடுக்கவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த நாடு பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். ஆகையினால் ஒவ்வொரு சமயத்தவரும் தமது சமயங்களை சுதந்திரமாக பின்பற்ற எவ்விதத் தடைகளையும் இடையூறுகளையும் விதிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.
முஸ்லிம்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியின் பங்காளிகள். அவர்கள் இந்த நாட்டுக்கு வியாபார நோக்கத்துக்கு வந்தவர்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பூரண சுதந்திரமுண்டு. அதனைத் தடுக்கவோ, அதை மறைக்கவோ யாருக்கும் முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கு வர்த்தகம் மிக முக்கியமானது.
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஆகையினால் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் அதனை முறியடிக்கவும் யாருக்கும் இடமளிக்க முடியாது.
எமது ஆட்சியில் நாம் அனைத்து சமயங்ளுக்கும் கௌரவமளிப்போம். சமய அனுட்டானங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்குவோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply