குஜராத் சிறையில் இருந்த 32 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுவித்தது

நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் வந்த போது நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த 151 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பி உள்ளனர். இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன் 32 பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டு குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

பாகிஸ்தானை தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் 32 பேரையும் விடுதலை செய்ய இந்தியா உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீனவர்கள் 32 பேரையும் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply