ஈராக்கில் பல்வேறு இடங்களில் தாக்குதல்: 29 பேர் பலி

ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் ஆரம்பித்த சூழ்நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலைநகர் பாக்தாத்தின் வடக்கு மாவட்டத்தில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி மீது கார் முழுவதும் நிரப்பட்ட குண்டுகளை கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 போலீசார் மற்றும் 4 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் 35 பேர் காயமடைந்ததாக அந்த அதிகாரி  தெரிவித்தார். மற்றொரு சம்பவத்தில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள டுஸ் கொர்மாட்டோ நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகவலை அந்நகர மேயரான ஷலால் அப்தால் உறுதிப்படுத்தினார்.

அதே போல் பாக்தாத்தின் மேற்கு புறநகர் பகுதியான அபு கிராய்பில் நடைபெற்ற தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர். மொத்தத்தில் இன்று நடந்த பல்வேறு தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply