உள்நாட்டுப் போர் ராணுவ ஹெலிகாப்டர் சுடப்பட்டது: 14 வீரர்கள் பலி
உக்ரைனில் கிரீமியாவை தொடர்ந்து கிழக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் ரஷிய ஆதரவாளர்களும் தன்னாட்சி உரிமைகோரி போராடி வருகின்றனர். தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறியுள்ளது. ராணுவத்துடன் போராட்டக்காரர்கள் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். டன்ட்ஸ்க் பிரந்தியத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் போராட்டக்காரர்கள் பிடியில் உள்ளன.
அவற்றை மீட்க ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அங்குள்ள ஸ்லோவியான்ஸ்க் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் ராணுவத்துக்கு சொந்தமான மி–8 ரக ராணுவ ஹெலிகாப்டரை போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இத்தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் பலியாகினர். அவர்களில் தளபதியும் ஒருவராவார். இதை உக்ரைன் அதிபர் (பொறுப்பு) ஒலெக்சாண்டர் டர்சினோங் உறுதி செய்துள்ளார்.
ஸ்லோவியான்ஸ்க் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். இதில் பொது மக்கள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தனது நாட்டு மக்களுடன் நடத்தும் போரை உக்ரைன் நிறுத்த வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ரஷிய வெளியுறவு மந்திரி விடுத்துள்ள அறிக்கையில், மேலை நாடுகள் தலையிட்டு உக்ரைனுடன் பேசி போரை நிறுத்த வேண்டும்’’ எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் போராட்டக்காரர்களை தீவிரவாதி என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ வர்ணித்துள்ளார். ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply