அமெரிக்காவில் தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் நகரை சேர்ந்தவர் கிரேசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 3 வயது மற்றும் 18 மாத மகன்களுடன் பக்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு பக்கத்து அறையில் அண்ணன்–தம்பி இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு தாயாரின் நண்பரது கைத்துப்பாக்கி இருந்தது. அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தனது தம்பியின் தலையில் துப்பாக்கியால் சுட்டான்.உடனே சத்தம் கேட்டு அவர்களது தாய் கிரேசி அங்கு ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தனது இளைய மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். துப்பாக்கியை சரிவர ‘லாக்’ செய்யாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply