தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் நாட்டுக்கு அழைக்கப்படலாம்
இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்திய மத்திய அரசாங்கத்தை போலவே, தமிழ் நாட்டு அரசாங்கத்துடனும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் த ஹிந்து பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஜெயலிலதாவுக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பி இருக்கிறது.
தமக்கு முன்னாள் தமிழக முதல்வர்களான எம்.ஜீ.ஆர். மற்றும் மு.கருணாநிதி ஆகியோரை வௌ;வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க கிடைத்தது.
ஆனால் ஜெயலலிதா ஜெயராமை இதுவரையில் சந்திக்க கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவருடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக கலந்துரையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply