இலங்கை மீனவர்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது : ராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை மீனவர்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.ராமேஸ்வரத்தில் சிறுபான்மை விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் மகத்துவம் தலைமையில் மீனவ அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகு உரிமையாளர் மற்றும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு எதிராக மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது, உள்ளிட்ட 5 தீர்மானங்கள் மேலும் நிறைவேற்றப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply